அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் செயற்பட்டு வந்த அகதிகளைச் சிறைவைக்கும் முகாம்கள் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளை சிறை வைக்கும் குறித்த முகாம்களை மூடுவதன் மூலம் சுமார்- 500 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் மிச்சப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னில் செயற்பட்டு வந்த தடுப்பு முகாம் இந்த வாரம் மூடப்பட்டுள்ள நிலையில் சிட்னியிலுள்ள தடுப்பு முகாமும் விரைவில் மூடப்படவுள்ளது.
இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் செயற்பட்டு வந்த ஒன்பது தடுப்பு முகாம்களில் இரண்டு முகாம்கள் மூடப்படுவது உறுதியாகியுள்ளது.
படகு வழியாக வர முயற்சித்த தஞ்சக் கோரிக்கையாளர்களைத் தடுத்து நிறுத்தியதில் கிடைத்த வெற்றியின் காரணமாகவே இந்த முகாம்கள் மூடப்படுவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மேன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முகாம்களை மூடும் அரசின் நடவடிக்கையை திசை திருப்பும் செயல் என தொழிலாளர் கட்சி விமர்சித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.