கேரளா ஐயப்பன் கோயில் அருகே பழமை வாய்ந்த ஆலமரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் போராட்டங்களையும் எதிர்ப்பையும் மீறி கடந்த-02 ஆம் திகதி கனகதுர்கா,பிந்து ஆகிய இரண்டு பெண்கள் சபரிமலைக்குள் சென்று தரிசனம் செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்புத்தெரிவித்து இந்து அமைப்புகள் உள்ளிட்ட பலர் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆங்காங்கே கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக் கருதி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம்(05) ஐயப்பன் கோயிலுக்கு அருகிலுள்ள ஆலமரம் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் போராடித் தீயை அணைத்தனர்.
இதனால், கடும் பீதியில் ஆழ்ந்துள்ள கேரள மக்கள் கோட்பாடுகளை மீறிப் பெண்கள் கோயிலுக்குள் சென்றதே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் எனவும், ஐயப்பனைக் கோபப்படுத்தியமையால் இன்னும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என மக்கள் பீதியுடன் வேதனை தெரிவித்துள்ளனர்.