கடந்த 1-ந் தேதி புத்தாண்டு தினத்தன்று, சென்னையை அடுத்த கிண்டி மற்றும் பரங்கிமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என எண்ணிய போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், உயிரிழந்த நபர் கிண்டி மடுவின்கரை மசூதி காலனியை சேர்ந்த பிரகாஷ் என கண்டறிந்தனர்.
மேலும் இந்நிலையில் பிரகாசின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரகாஷ் சரமாரியாக வெட்டப்பட்டு அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறியதால் உயிரிழந்துள்ளதாக அறிக்கை அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து போலீசார் பல கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.