Loading...
பிரபல ஒடியா மொழி மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகையுமான நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து பலியானார்.
நடிகை நிகிதா என்ற லட்சுமிபிரியா சமீபத்தில் தனது தந்தை வீட்டுக்கு சென்றிருந்தபோது மாடியில் இருந்து எதிர்பாராத வகையில் தவறி விழுந்தார். தலை மற்றும் உடலில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அவருடைய உறவினர்கள் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி நிகிதா பலியானார்.
Loading...
‘சோரி சோரி மான சோரி’, ‘மா ரா பனடாகினி’, ‘ஸ்மைல் ப்ளீஸ்’ போன்ற ஒடியா மொழி திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி வேடங்களிலும் நடித்த நடிகை நிகிதா, சமீபத்தில் கணவரிடம் இருந்து பிரிந்து ஆறு மாத குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...