Loading...
யாழ்.வயாவிளானிலிருந்து யாழ்.நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தை இடைமறித்து சாரதி மீது தனியார் பஸ்ஸின் நடத்துனர் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் யாழ்.ஆலடிச் சந்திப் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை(07) இரவு இடம்பெற்றுள்ளது.
Loading...
பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியே குறித்த தாக்குதலுக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளானவரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...