குஜராத் மாநிலம் சூரத்தில் மூதாட்டியொருவர் மீது குப்பை லாரி மோதியதுடன் அதன் பின்னர் அந்த மூதாட்டி மீது ஏறிச் சென்ற போதும் சாயிபாபா வழிபாட்டினால் எந்தவித பாதிப்புமில்லாமல் உயிர் தப்பியுள்ளார்.
ஓட்டுநர் மூதாட்டி மீது லாரி மோதியதையும், அவர் கீழே விழுந்ததையும் கவனிக்கவில்லை. இதனால்,லாரி கீழே விழுந்த மூதாட்டி மீது ஏறி சற்றுத் தூரம் சென்றது. எனினும், குறித்த சம்பவத்தில் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
சூரத்தின் பி.ஆர்.சி. பகுதியைச் சேர்ந்தவர மூதாட்டி ரமிலா சொலங்கி. 55 வயதான இவர் சூரத் மாநகராட்சி துப்பரவுப் பணியாளராக வேலை பார்க்கிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை(07) காலை-08 மணியளவில் இவர் பி.ஆர்.சி. கேட் சாலை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வழியில் சாயி பாபா கோயில் முன்பு சாலையில் நன்றாகக் கும்பிட்டிருக்கின்றார்.
கைகளைக் குவித்து கண்களை மூடி கும்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர் அருகில் நின்று கொண்டிருந்த மாநகராட்சி குப்பை லாரி பின்னோக்கி நகர்ந்துள்ளது. மூதாட்டி மீது மோதிய லாரி அவரைக் கீழே தள்ளி விட்டுவிட்டது.
ஓட்டுநர் மூதாட்டி மீது லாரி மோதியதையும்,அவர் கீழே விழுந்ததையும் கவனிக்கவில்லை. இதனால்,லாரி கீழே விழுந்த மூதாட்டி மீதேறி சற்றுத் தூரம் சென்றது. குறித்த விபத்தில் மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
அப் பகுதியிலிருந்த மற்றொருவருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் முழுக்க அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
விபத்திலிருந்து உயிர் தப்பியது தொடர்பில் மூதாட்டி கூறுகையில், “நான் கும்பிட்ட சாயிபாபாதான் என் உயிரைக் காப்பாற்றியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்