கெட்ட முதலமைச்சர் யார் எனத் தேடினால் கேரள முதல்வர் பினராயி விஜயன் என கூகுள் தேடு தளத்தில் காண்பிக்கிறது. அவரது விக்கிபீடியா லிங்க் உடன் வருகிறது.
கூகுள் தளம் அதன் புரோக்கிரமார்கள் இயற்றும் அல்காரிதம் கோட்களின் அடிப்படையில் தேடப்படும் வார்த்தைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட நபர்களின் படங்களைக் காட்டும். இது திட்டமிடப்பட்டு தனிமனிதர்களை விமர்சிக்கும் செயல் அல்ல. இதனை ஒரு குழு கொண்டு நிர்வகிப்பது,திருத்தம் செய்வது மிகக் கடினம் என கூகுள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்படி தேடுதளங்கள் குறிப்பிட்ட நபரைப் பற்றிப் பெரும்பாலான தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளைக் கொண்டே இந்த சர்ச் ரிசல்ட் கிடைக்கிறது.
முன்னதாக சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையடுத்து 50 வயதுக்குட்பட்ட பெண்களை நுழைய வைக்க பினராயி விஜயனின் இடதுசாரி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது.
இதனால்,பாஜக உள்ளிட்ட வலதுசாரி கட்சிகளின் கடும் எதிர்ப்பை பினராயி அரசு இணையத்தில் சம்பாதித்தது.
இதன் விளைவாக சமூக வலைத் தளங்களில் அவர் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டார். இதனால் தற்போது ’பேட் சீஃப் மினிஸ்டர்’ என கூகுளில் தேடினால் பினராயி விஜயனின் படம் மற்றும் அவரது விக்கிபீடியா லிங் வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.