மன்னார் நகர் மத்திய பகுதியில் சதோச கட்டிடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகத்தின் உட் பகுதியானது முழுவதும் அகழ்வு செய்யப்பட்டு வந்தது அகழ்வு பணியின் போதும் தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டன இந்த நிலையில் தற்போது 225 ஆவது நாளாக வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த ஒரு வார காலமாக வளாகத்தில் அடையாளப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தப்படும் பணிகள் குறைக்கப்பட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்றன.
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் சதோச வளாகத்திற்க்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதி உள்ளூர் கடைய்தொகுதிக்கு செல்லும் ஒரு பகுதி மூடப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் இடம் பெற்றி வருகின்றது.
விரிவுபடுத்தப்படும் பகுதிகளிளும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்படுள்ளன. தற்போது வரை 282 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 277 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.