பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் எதிர்வரும் 14ஆம் திகதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசினால் இன்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் பண்டிகை ஜன.15 முதல் 17 வரை கொண்டாடப்படவுள்ளது.
இதுகுறித்து பல்வேறு சங்கங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் அனைவரும் தத்தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக வரும் ஜன.14 திங்கட்கிழமையை அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு நிறுவனங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்விக்கூடங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரியுள்ளனர்.
பல்வேறு சங்கங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்து, வரும் ஜன.14 திங்கட்கிழமையை அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு நிறுவனங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்விக்கூடங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து அந்த நாளை ஈடுகட்ட வரும் பெப்ரவரி 9 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.