தாய்லந்தில் உள்ள சவுதி அரேபிய இளம்பெண் ரஹாப்புக்குத் தஞ்சமளிப்பது பற்றி அவுஸ்திரேலியா அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை.
ஆனால், 18 வயது குமாரி ரஹாக்கு, அவசரக்கால பயண ஆவணம் வழங்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியிருப்பதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபிய இளம்பெண்ணை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வர கான்பெரா எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அவுஸ்திரேலியா தவிர ஏனைய மேற்கத்திய நாடுகளும் தமக்கு உதவவேண்டும் என்று குமாரி ரஹாப் Twitterஇல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#saverahaf என்ற இயக்கம் இணைய உலகில் பிரபலமடைந்து வருகிறது. குமாரி ரஹாபுக்கு பிரிட்டன் தஞ்சமளிக்கவேண்டும் என்று வலியுறுத்தும் மனு இணையத்தில் வலம் வருகிறது.
சுமார் 75 ஆயிரம் கையெழுத்துகளைத் திரட்டுவது இலக்காக அமைந்துள்ளது. இதுவரை 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த மனுவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
குமாரி ரஹாப் நேற்று முன்தினம் குவைத்திலிருந்து பேங்காக் சென்றார். பிறகு அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.