கண்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தனது உயிரை பணயம் வைத்து, நான்கு பேரின் உயிரை காப்பாற்றியவரை ஒட்டுமொத்த இலங்கையர்களைளும் பாராட்டி வருகின்றனர்.
யட்டிநுவர வீதியில் அமைந்து 5 மாடி கட்டடத்தில் நேற்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது உயிரை பணயம் வைத்து முழு குடும்பத்தையும் காப்பாற்றிய வீர தந்தையான ராமராஜ் குறித்து அனைத்து ஊடகங்களும் கவனம் செலுத்தியுள்ளன.
சுமார் 75 அடி உயரத்தில் அமைந்துள்ள வீட்டினுள் தீபற்றியுள்ளது. பற்றிய தீ வேகமாக பரவியமையினால் வீட்டினுள் இருந்தவர்கள் வெளியே வர முடியாத நிலையில் சிக்கிகொண்டுள்ளனர்.
திகில் நிறைந்த தருணத்தில் தனது செயற்பாடு குறித்து கருத்து வெளியிட்ட ராமராஜ், ஜன்னல் ஊடாக வெளியே இருப்பவர்களிடம் “நாங்கள் உள்ளே சிக்கியுள்ளோம். எங்கள் குடும்பத்தை காப்பாற்ற உதவுமாறு” கூல்லிட்டேன்
உடனடியாக மக்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர். பிள்ளைகளை வீசுங்கள் நாங்கள் பிடிக்கிறோம் என மக்கள் கூறியுள்ளனர்.
வீட்டினுள் இருந்த இரண்டு போர்வைகள் மற்றும் மெத்தை ஒன்றை ஜன்னல் ஊடாக ராஜ்குமார் மக்களை நோக்கி முதலில் வீசினேன்.
பின்னர் மக்கள் போர்வையை பிடித்து கொண்டு தயார் நிலையில் இருந்தனர். “நான் முதலாவதாக 8 வயது மகனான இஷாரத் என்பவரையும் இரண்டாவது மகனான சத்தியஜித் என்பவரையும் முதலில் கீழே தூக்கிய வீசினேன். நேற்று தான் பலர் பாடசாலையை ஆரம்பித்த மூன்றாவது மகனை இறுதியாக வீசினேன்.
பிள்ளைகளுக்கு எந்த காயமும் ஏற்பட கூடாதென்பதே எனது பிரதான நோக்கமாக இருந்தது. பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட்டிருந்தால் இன்று நான் இருந்து பயனில்லை.
எனது அதிஷ்டம் பிள்ளைகள் காயங்களின்றி தப்பி விட்டார்கள். அடுத்ததாக எனது மனைவியை தூக்கி வீசினேன். அதற்காக நான் சிறிது தூரம் கீழே இறங்கிவிட்டு மனைவியை குதிக்குமாறு கூறினேன் மனைவி குதிக்கும் போது என்னால் சரியாக பிடித்து கொள்ள முடியாமல் கையைவிட்டு விட்டேன். எனினும் மக்கள் அவரையும் காயமின்றி பிடித்து விட்டார்கள்.
மனைவியை காப்பாற்ற முயற்சித்த போது எனது கையில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் என்னால் இறங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னை பிடிக்குமாறு கூறிவிட்டு நானும் குதித்து விட்டேன். என்னையும் காயமின்றி மக்கள் காப்பாற்றி விட்டார்கள்.
கண்டி மக்கள் மிகவும் நல்லவர்கள் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சொந்த ஊர் பண்டாரவளை. நானும் எனது மனைவி ராதிகாவும் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கண்டி நகரத்திற்கு வந்தோம். நான் நகை செய்யும் ஆசாரி தொழில் ஈடுபடுகின்றேன். இந்த பகுதி மக்களிடம் இன பேதம், மத பேதம் என ஒன்றும் இல்லை. பிரச்சினை ஒன்று ஏற்பட்டால் சரியான நேரத்திற்கு ஒன்று கூடிவிடுவார்கள். எங்கள் அதிஷ்டத்திற்கு எங்களை சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள்.
கண்டி நகர தீயணைப்பு பிரிவு, பொாலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீ மேலும் பரவாமல் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்” என ராஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.