Loading...
மேற்கு வங்காளத்தில் இமைகளின்றி ஒற்றைக் கண்ணுடன் பசு ஒன்று பிறந்ததுள்ளது.
வித்தியாசமான முகத்தோற்றத்துடன் காணப்படும் இந்த பசுக்கன்றை கடவுளின் அவதாரமாக எண்ணி மக்கள் வணங்கி வருகின்றனர்.
இந்த கன்றுக்குட்டியை பார்க்கும்போது வேற்றுகிரக உயிரினம் போல் உள்ளதுடன் சிறுவர் கார்ட்டூனில் வரும் உருவம் போன்றும் காட்சியளிக்கிறது.
Loading...
குறித்த கன்றுக்குட்டி, ஒரு கண்ணுடன், இமைகளும் மூக்கும் இன்றி பிறந்ததும் கன்றின் தாய் அதை ஒதுக்கிவிட்டது.
ஆனால் மக்கள் கன்றினை எடுத்து வளர்ப்பதோடு, இதை வணங்கினால் அதிர்ஷ்டம் என்று கூறி பாதுகாத்து வருகின்றனர். இந்த அதிர்ஷ்ட பசுவைக்காண தினமும் கூட்டம் அலைமோதுகிறதாம்.
Loading...