வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று (புதன்கிழமை) கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை சர்வமதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில், வட. மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட், இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரன், வட. மாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் அரசாங்க அதிபர்கள், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், வடக்கு மாகாண அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர், ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், வடக்கு ஆளுநராக சுரேன் ராகவனை நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமை குறிப்பிடத்தக்கது.