கேத்தரின் தெரசா, துபாயில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய நடிகை. இவர் 12ஆம் வகுப்பு வரை துபாயில் படித்துவிட்டு உயர் கல்வி பயில பெங்களூரு வந்தார். பெங்களூருவில் செயின்ட் ஜோசப் கல்லூரியில் 2 ஆண்டுகள் பயின்ற கேத்தரின் தெரசா டான்ஸ், ஐஸ் ஸ்கேட்டிங்க், சிங்கிங், போன்றவற்றையும் கற்று தேர்ந்தார். 2010ஆம் ஆண்டு ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தில் அறிமுகமானார் நடிகை கேத்தரின் தெரசா.
2014ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார் நடிகை கேத்ரின் தெரசா. தொடர்ந்து தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து முன்னனி நடிகையானார் நடிகை கேத்தரின் தெரசா. புதிய பட வாய்ப்புகளை பெறவும், தொழில் போட்டியை சமாளிக்கவும் கிளாமராக நடிக்க ஆரம்பித்தார் நடிகை கேத்தரின் தெரசா.
மெட்ராஸ் மற்றும் கதகளி ஆகிய படங்களில் ஹோம்லியாக நடித்த நடிகை கேத்தரின் தெரசா கனிதன் படத்தில் நாயகியாக நடித்தது மட்டுமின்றி “யப்பா சப்பா” என்ற ஐட்டம் பாடலுக்கு அருமையான கிளாமர் நடனமும் ஆடி அசத்தியிருப்பார். இதன் பின்பு வந்த படங்களில் தொடர்ந்து கிளாமராகவே நடித்து வந்தார் நடிகை கேத்தரின் தெரசா. இவர் கடைசியாக 2011 ஆம் ஆண்டு “உப்புகன்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன்” என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இதன் பின்பு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை கேத்தரின் தெரசா, 7 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநர் விவேக் இயக்கத்தில் நடிகர் ஃபாஹத் ஃபாசில் நடிக்கும் மலையாள படம் “ஆணென்கிலும் அல்லெங்கிலும்” இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை கேத்தரின் தெரசா. நகைச்சுவை படமான இந்தப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, கோட்டயம் மற்றும் பெங்களூருவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப்படம் தவிர தமிழில் சிலம்பரசன் நடிக்கும் “வந்தா ராஜாவா தான் வருவேன்”, “நீயா 2”, “அருவம்” ஆகிய 3 தமிழ்ப்படங்களிலும், இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் தெலுங்கில் ரீமேக் ஆகும் “தெறி” படத்திலும் நடிக்கிறார் நடிகை கேத்தரின் தெரசா