இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பணிப்பெண்களின் வீதத்தில் 31.7 வீதம் வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றை சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று இன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில் அதாவது 2018இல் 211,502 இலங்கையர்கள் வெளிநாடு சென்றுள்ள போதும் அதில் 1,44,531 பேர் ஆண்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் முன்னைய வருடங்களை ஒப்பிடும் போது மத்திய கிழக்கு நாடுகளை விட ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளுக்கே அதிகளவானோர் தொழிலுக்காக செல்கின்றனர் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.