Loading...
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை சிகரட்டுக்கள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் சுங்கப்பிரிவினர் தெரிவித்டதனர்.
இதற்கமைய குறித்த அறுவரின் பயணப்பொதிகளிலிலிருந்து 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாசனை திரவியங்களும், சிகரட் பொதிகள் 25, சிகரட் தயாரிக்கும் புகையிலை தூள்கள் காட்ரூன் 30, மற்றும் மதுபான போத்தல்கள் 30 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கட்டுநாயக்க காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Loading...