புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வடக்கு கிழக்கு இணைப்போ சமஸ்டியோ கிடையாது எனவும், பெளத்தத்திற்கு முன்னுரிமை மற்றும் ஒற்றையாட்சி போன்ற விடயங்களிலும் எந்தவித மாற்றங்களும் கிடையாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சூளுரைத்துள்ளார்.
நேற்றைய தினம்(11)நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூடிய போது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழுவின் வரைவு மற்றும் சட்ட வல்லுனர்களின் அறிக்கைகளை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கு சகல கட்சிகளினதும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனை சகல இன, மத, மொழி, பிரதேச மக்களின் கருத்துக்களாக கருத வேண்டும். அதனை விடுத்து பெளத்தம் அழிக்கப்படுகின்றது, நாடு பிளவுபடுகின்றது என்ற கருத்துக்களைக் கூற வேண்டாம்.
ஒற்றையாட்சி என்பதில் எந்த முரண்பாடுமில்லை. ஒற்றையாட்சிக்குள் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்வது என்பதனையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
புதிய அரசியலமைப்பில் பெளத்தத்துக்கு முன்னுரிமையில்லை, நாட்டைப் பிளவுபடுத்துகின்றோம், வடக்க- கிழக்கை இணைக்கின்றோம் என்ற கருத்துக்களை எதிர்க்கட்சியினர் அண்மைக் காலமாக கூறி வருகின்றனர். ஆனால், இன்று முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் அவை ஒன்றுமேயில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.