Loading...
நெடுந்தீவுக் கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளையும் ஒன்பது மீனவர்களையும் சிறிலங்கா கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு விசைபடகுகளையும் 9 மீனவர்களையுமே கடற்படை இவ்வாறு சிறைப்பிடித்தது.
Loading...
நெடுந்தீவுக்கு வட கிழக்கே லைட் ஹவுஸ் பகுதியில் கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்ததாகவும் அதன்போது அப்பகுதியில் இரண்டு விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
கைதாகிய மீனவர்கள் காரை நகர் கடற்படை முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Loading...