Loading...
வவுனியா ஓமந்தையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு உணவருந்தி விட்டு வீதியை கடக்க முற்பட்ட முதியவரை வவுனியாவிலிருந்து சென்ற பிக்கப் ரக வாகனம் மோதியுள்ளது.
Loading...
இதனால் தலையில் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கபட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓமந்தை பொலிசார் தமது கட்டுப்பாட்டில் எடுத்துசென்றுள்ளதுடன் அதன் ஓட்டுநரையும் கைதுசெய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை ஓமந்தை போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...