கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் 2 ஆண்டுகள் கழித்து அம்பலமாகியுள்ளது.
ஜெகதீஷுக்கு, மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டிவிங்கிள் டாக்ரே என்ற 20 பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இது தகாத உறவாக மாறியது.
இதையடுத்து அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டமைக்கு ஜெகதீஷ் குடும்பத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் டிவிங்கிள் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று நினைத்து தனது மூன்று மகன்களுடன் சேர்ந்து அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் திகதி டிவிங்கிளை தனியாக காரில் அழைத்து சென்று கழுத்தி நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவளது உடலை பெற்றோல் ஊற்றி எரித்து வேறொரு இடத்தில் புதைத்துள்ளனர்.
விங்கிளின் பெற்றோர் மகளை காணவில்லை என்று முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
ஓர் இடத்தில் யாரையோ கொன்று புதைத்திருப்பதாகச் சந்தேகமாக இருக்கிறது என பொலிசாருக்கு தகவல் வந்ததது.
இதையடுத்து அந்தப் பகுதியில் தோண்டினர். அங்கு நாய் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது.
பின்னர் டிம்பிள் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், வழக்கைக் கிடப்பில் போட்டனர். சம்பவம் நடந்து 2 வருடங்களாகிவிட்டது.
இந்நிலையில், மூளை மின் அலை ரேகைப்பதிவு (Brain Electrical Oscillation Signature (BEOS) என்ற நவீன முறை சோதனையின் படி பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
டிவிங்கிளின் பெற்றோரிடமும் ஜெகதீஷிடம் இந்த சோதனை நடத்தப்பட்டதில் சில உண்மைகள் அம்பலமானது.
டிவிங்கிள் புதைக்கப்பட்ட இடத்தை பொலிசார் கண்டுபிடித்து தோண்டினர். பிரேஸ்லெட் மற்றும் சில ஆபரணங்கள் கிடைத்துள்ளது
ஜெகதீஷும் அவர் மகன்களும் கொலைக்கு முன், அஜய்தேவ்கன் நடித்த த்ரிஷயம் படத்தைப் பார்த்துள்ளனர்.
(இந்தப் படம் தமிழில் கமல் நடிப்பில் ’பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது). அந்தப் படத்தின் கதைப்படி வழக்கை திசை திருப்ப முயன்றுள்ளனர்.
இதனை அடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.