சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய்யின் தீவிர ரசிகை என்றே சொல்லலாம். பைரவா படத்திலும் ஏற்கனவே ஜோடி சேர்ந்திருந்தார்.
தற்போது தமிழில் இவருக்கு வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்ததோடு மேலும் ஒரு ஹீரோயின் ஸ்பெஷல் கதையிலும் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் சேலம் ஆத்தூரில் நகைக்கடை நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூடியது.
சேலத்தில் சென்னை நெடுஞ்சாலையில் அவரின் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு ரசிகர்களுடன் கலந்துரையாடலும் நடந்தது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, நல்ல கதைகளுக்காக வாய்ப்பும் இருக்கின்றது. அஜித்துடன் நடிக்க வேண்டும். அதற்காக காத்திருக்கிறேன்.
வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். திருமணம் பற்றிய் இப்போது ஐடியா இல்லை என கூறியுள்ளார்.