நாய்களால் மனிதர்களுக்கு தொற்றும் “ ட்ரிபனசோமா” எனப்படும் தொற்று நோய்த் தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களிலுமுள்ள நாய்களின் இரத்தமாதிரிகள் தற்போது பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள சில நாய்களின் கண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இந்த நோய் மனிதர்களுக்குத் தொற்றுவது குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் பேராசிரியர் அசோக தன்கொல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாய்களால் தொற்றும் குறித்த நோயால் மனிதர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையெயன சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.