பிரான்சில் இன்று காலை பேக்கரி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் காரணமாக நான்கு பேர் இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Rue de Trevise மற்றும் Saint-Cecile வீதியில் இருக்கும் பேக்கரி ஒன்றில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 9 மணிக்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து காரணமாக 36 பேர் காயமடைந்திருப்பதாக முதல் கட்டத் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று இந்த சம்பவம் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்த வெடி விபத்து கேஸ் லீக்கின் காரணமாக ஏற்பட்டுள்ளது. காயமடைந்திருக்கும் 36 பேரில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். அந்த ஐந்து பேரில் இரண்டு தீயணைப்பு வீரர்களும் உயிருக்கு போராடி வருகின்றனர்.
மற்ற அனைவருக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாரிசின் தீயணைப்பு துறை தலைவர் கூறுகையில், 12 பேருக்கு மிகவும் மோசமான காயம் ஏற்பட்டுள்ளது, 24 பேர் சிறிய அளவிலான காயங்களுடன் பாதுகாப்பான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த நபர் ஒருவர் கூறுகையில், இந்த வெடி விபத்து காரணமாக பேக்கரிக்கு வெளியில் அமர்ந்து பிரேக் பாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களும் காயமடைந்தனர்.
இது அப்படியே ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது போன்று இருந்தது. அதன் தாக்கம் சில தூர மீற்றர் வரை இருந்தது என்று கூறியுள்ளார்.
இதைத் தவிர வெடி விபத்து காரணமாக அருகில் இருந்த கார்கள் தீப்பிடித்தாக கூறப்படுகிறது.
தற்போது அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பொலிசார், அப்பகுதிக்கு சிறிது நேரம் யாரும் வர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
David Bangura என்ற 38 வயது பெண் கூறுகையில், இந்த சம்பவம் காரணமாக அந்த பில்டிங்கின் நான்கு மாடிகள் வெடித்து சிதறின. அதில் ஒரு பெண் முதல் மாடியில் இருந்து என்னை காப்பாற்றுங்கள், என்னிடம் குழந்தை இருக்கிறது என்று கெஞ்சினார்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொலிசார் இங்கு குவிந்தனர். அங்கிருந்த மக்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.
ஹெலிகாப்டர்கள் வந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த வெடிவிபத்தின் காரணமாக நான்கு பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி எந்த ஒரு உறுதியான தகவல் வெளியாகவில்லை. விபத்தில் சிக்கிய நபர்கள் இரத்தம் படிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அழைத்துச் செல்லப்படும் புகைப்படங்களும், ஸ்டரக்சரில் கொண்டு செல்லப்படும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
பிரான்சில் இன்று காலை திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9 மணி அளவில் நகரின் முக்கிய வீதியில் உள்ள பேக்கரி ஒன்றில் கேஸ் கசிந்து பயங்கர வெடிவிபத்துஏற்பட்டது.
இதில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர்படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 2பேர் மோசமானநிலையில் உள்ளதாகவும். 7பேர் பலத்த காயம்அடைந்துள்ளதாகவும் பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விபத்தில் உயிரிழப்புகள் இருக்கு கூடும் என்று தெரிகிறது.மேலும் அங்கு எத்தனைபேர் சிக்கி உள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை எனவே உயிரிழப்பு உறுதி செய்யப்படாமல் உள்ளது.
இன்னும் தீயை அணைக்க இயலாததால் பொலிசார் தொடர்ந்து போராடி வருகின்றனர்.மேலும் இந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் மக்கள், வெடித்தசத்தம் சுமார் 2கிலோ மீற்றர் தூரம் வரை கேட்டது என்று தெரிவித்துள்ளனர்.