Loading...
ரஜினியின் பேட்ட படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினியுடன் சசிகுமாரும் நடித்திருந்தார்.
சமீபத்தில் இந்த படத்தை பற்றி பேசிய சசிகுமார், பேட்ட படத்தை நான் சென்னையில் பார்க்கவில்லை. இங்கே தென்காசியில் தான் ரசிகர்கள் மத்தியில் விடியற்காலை 4 மணிக்கு பார்த்தேன்.
Loading...
படத்தை பார்த்த பிறகு நான் கூட யோசிக்கவில்லை. ஆனால் ரஜினி சார் மறக்காமல் எனக்கு போன் செய்து படத்தின் வரவேற்பை பற்றி கேட்டார். என்னால் அது மறக்கவே முடியாது. அவர் எனக்கு போன் செய்ய வேண்டும் என அவசியமே இல்லை. ஆனால் போன் செய்தார் என்றார்.
Loading...