தமிழில் முன்னணி நடிகையாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த விழாவொன்றில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய நடிழக கீர்த்தி சுரேஷ்,
“மலையாளத்தில் நான் முதலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தமிழ் சினிமாவில் நடித்ததால் தான் எனக்கு ஒரு அடையாளம் மற்றும் அங்கீகாரம் கிடைத்தது. நடிகையாக வேண்டும் என்று படிக்கும்போது இருந்தே ஆசை எதுவும் இல்லை.
மொடலிங் செய்துவந்தேன். ஆனால் கடவுளின் அணுகிரகம் இருந்ததால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, நடிகையாகி விட்டேன். கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கின்றேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் நிறைய புதுப்புது இயக்குனர்கள் அறிமுகம் ஆகி பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களை இயக்குகிறார்கள்.
என்னால் முடிந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இதற்காக கடுமையாக உழைக்கிறேன். திருமணம் செய்யும் ஆசை இப்போது இல்லை. இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும். நடிகர் விஜய் கூட நடித்துவிட்டேன். அஜித்குமாருடன் நடிக்க வேண்டும் என்றால் அது நடக்கும். வரும்போது பார்க்கலாம். அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மனதில் ஒரு துளிகூட ஆசை இல்லை” எனக் கூறினார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அனைத்து திரைப்படங்களும் வெற்றிபெற்றதால், தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.