Loading...
டெல்லியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் எவரும் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். இதன்போது அவர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
Loading...
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.
தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். டெல்லியை தவிர்த்து விட்டு இங்கு எவரும் அரசியல் செய்ய முடியாது” எனக் கூறினார்.
Loading...