Loading...
கிளிநொச்சி பொது சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் பழக்கடையொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பொதுச்சந்தையில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் இன்று இரவு திடீரென தீப்பற்றிக்கொண்டதை அவதானித்த அயலவர்கள், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முயற்சிகளை எடுத்திருந்தனர்.
இதேவேளை கரைச்சிப்பிரதேச சபையின் தீயணைப்புப்பிரிவு மற்றும் கரைச்சிப்பிரதேச சபை நிர்வாகம் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து ஏனைய கடைகளுக்கும் தீ பரவாது தீயைக் கட்டுப்படுத்தியிருந்தனர்.
Loading...
இந்த விபத்து மின்ஒழுக்கினால் ஏற்பட்டதா? அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா? பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...