பிலிப்பைன்ஸிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, அவருடன் சேர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அழைத்து சென்றுள்ளார்.
கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் பின்னர் மைத்திரி – ரணிலுக்கிடையே முன்னர் இருந்த விரிசல் மேலும் வலுப்பெற்றது.
இதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை தெரிவிக்காமல், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சுதந்திர கட்சி உறுப்பினர்களான டிலான் பெரேரா, நிஷாந்த முத்துஹெட்டிகம, லசந்த அழகியவண்ண, லக்ஷமன் பெரேரா, ஸ்ரீயானி விஜயவிக்ரம, அங்கஜன் ராமநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சரவைக்கு தலைமை தாங்கும் ஜனாதிபதி எப்படி எதிர்கட்சிக்கும் தலைமைதாங்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சில கட்சிகள் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், பிலிப்பைன்ஸ் பயணமானது அதனை வலுப்படுத்தி நிற்கின்றது.