வாட்ஸ்ஆப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மிக எளிமையான செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் பயன்கள் இருப்பது போல பல ஆபத்துகளும் இருக்க தான் செய்கிறது.
அந்த வகையில் அமேசானில் பணிப்புரியும் பெண் ஒருவரின் ட்விட்டர் பதிவு தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
அவர் தனது பதிவில், “நான் புதிதாக வாங்கியிருக்கும் மொபைல் நம்பரை முன்பு உபயோகப்படுத்தியவரின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை என்னால் பார்க்க முடிகிறது” என தெரிவித்துள்ளார்.
இது சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பபட்டது. இருப்பினும் இதனை சரி செய்ய வாட்ஸ்ஆப்பில் வழி இருக்கிறது.
ஒருவர் தான் உபயோகித்து வரும் மொபைல் நம்பரை மாற்றவிருக்கிறார் என்றால் வாட்ஸ்ஆப்பில் கொடுக்கப்பட்டுள்ள Change Number feature ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம் பழைய நம்பரில் இருந்த அனைத்து வாட்ஸ்ஆப் தகவல்களும் புதிய நம்பருக்கு மாறிவிடும்.
ஆனால் பலரும் இதனை செய்யாமல் நம்பரை மாற்றிவிடுகின்றனர். இதனால் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.