Loading...
யேர்மனியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 39 வயதான நவநீதன் என்பவரே ஜேர்மனில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் அரச தலைவர்களை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Loading...
குறித்த நபர் தொடர்பிலான விபரங்களை தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிட ஜேர்மன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் இவருக்கு தொடர்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில அரசியல் தலைவர்களை கொலை செய்ய இவர் முயற்சித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
Loading...