வட அயர்லாந்தில் கவரோடு மாத்திரையை விழுங்கிய பெண் ஒருவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு 17 நாட்கள் தொண்டையில் சிக்கியருந்த பிளாஸ்டிக் கவர்
வெளியே எடுத்துள்ளனர்.வட அயர்லாந்தைச் சேர்ந்த ரெஹீனா (40) என்ற பெண் கடந்த மாதம் வலி நிவாரணி மாத்திரையை ஏதோ ஒரு ஞாபகத்தில் கவரை பிரிக்காமல் கவரோடு சேர்த்து விழுங்கியுள்ளார்.
இதனையடுத்து மறுநாள் தொண்டையில் லேசாக எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த எரிச்சல் வலியாக மாறியது. வலி தங்காம்மல் மருத்துவமனைக்குச் சென்றுயுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் சாதாரண தொண்டை வலிக்கான மருந்தை கொடுத்தனர்.ஆனால் தொடர்ந்து ஒரு வாரம் ஆகியும் தொண்டையில் வலி தீராத நிலையில் அவர் மற்றொரு மருத்துமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தொண்டையை எக்ஸ்ரே எடுத்து பார்க்கலாம் என்று கூறி ஸ்கேன் எடுத்தனர். அப்போது அவர் தொண்டையில் ஏதோ ஒரு பொருள் ஒன்று சிக்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஸ்கேநில் கவர் பிரிக்கபடாத 4 மாத்திரையை சுமார் 17 நாட்களாக தொண்டையில் சிக்கயும் அவர் உயிர் வாழ்ந்துள்ளார். இதையடுத்து ரெஹீனாவுக்கு அவசர சிகிச்சையளித்து மருத்துவர்கள் அவர் தொடையில் இருந்த மாத்திரை கவரை 17 நாட்ககளுக்கு பின்பு வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்