இந்தோனேசியாவில் ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டைக் கூற மறுத்த கணவரை உயிரோடு கொளுத்திய மனைவி சிகிச்சை பெற்று வந்தவர் கணவர் உயிரிழந்தார்.
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா-வில் டெடி பூர்ணமா என்ற நபர் கடந்த செவ்வாய் அன்று வீட்டின் மாடியில் பதிக்கப்பட்டிருந்த பளிங்குக் கற்களை சீரமைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மனைவி இல்ஹம் கயானி கணவரின் ஸ்மார்ட் போனை எடுத்து வந்து அதன் பாஸ்வேர்டை கேட்டுள்ளார் ஆனால் டெடி பூர்ணமா பாஸ்வேர்டை தர மறுத்துள்ளார்.இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவர் பூர்ணமா மனைவி கயானியை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி கயானி திடீரென பெட்ரோலை எடுத்து கணவரின் மீது ஊற்றி லைட்டர் மூலம் தீ வைத்து உயிரோடு கொளுத்தினார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அனைத்து பூர்ணமாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.