சின்னதிரையும் சினிமாவுக்கு இணையாக மாறிவருகிறது. இதில் சானல்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. சீரியல்களை புதிது புதிதாக உருவாக்குவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இதில் கடும் போட்டியில் இருப்பது சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தான். சன் டிவியில் கல்யாண வீடு சீரியல் சமீபத்தில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
விஜய் சானலில் மௌனராகம், சின்ன தம்பி ஆகியன நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் செம்பருத்தி சீரியலும் இதே வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் வரும் ஜனவரி 21 முதல் சிவா மனசுல சக்தி என்னும் புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இனி என்ன ரசிகர்கள், ரசிகைகளுக்கு கொண்டாட்டம் தானே.
?? சிவா மனசுல சக்தி! புத்தம் புதிய மெகாத்தொடர்! ஜனவரி 21 முதல் திங்கள் – சனிக்கிழமை மாலை 6 மணிக்கு உங்கள் விஜயில்.. #SivaManasulaSakthi #SMS pic.twitter.com/PQ3iB6i4se
— Vijay Television (@vijaytelevision) January 19, 2019