மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து தமிழர்களின் வரலாறும்வரலாற்று கதாநாயர்களும்…கடந்த இரண்டு தொடர்களை வாசித்த நண்பர்கள் வாசகர்கள் இத்தொடரைதொடர்ந்து எழுதுமாறு என்னை ஊக்கவித்தனர். தமிழ்வாசிக்க கூடியஇளையோரும் ஆர்வத்துடன் வாசிப்பதும் மேலும் எனக்கு ஓர்உத்வேகத்தினை தருகின்றது. பதிவில் பல எழுத்துப்பிழைகள்வசனப்பிழைகள் உள்ளதனையும் பல நண்பர்கள் எனக்குசுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைத்து நண்பர்களிற்கும் வாசகர்களிற்கு நன்றிகள். இப்பதிவினை மீள்பிரசுரம் செய்கின்ற அனைத்து இணையக்களங்களிற்கு மற்றும் பலதனிப்பட்ட நண்பர்களிற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இப்பதவினை எனக்கு நேரம்கிடைக்கும் பொழுது எவ்விதசெழுமைப்படுத்தலையும் செய்யாது பதிவு செய்கின்றேன். எனதுமொழிப்பற்றாக்குறையினை நான் ஓர் பெரிய குறையாக கருதாது என்பாணியிலேயே பதிவிட விரும்புகின்றேன்.
முதலாவது பகுதியில் நான் குறிப்பிட்டது போல் 82-90 காலப்பகுதியில்சுவிற்சர்லாந்து தமிழர் குடியேற்றம் ஆரம்பமானது. இன்று இந்த பதிவுதனியே ஓர் சில ஞாபக மூட்டலாக இருந்தாலும் அடுத்த சந்ததிகளிற்கானஓர் வரலாற்று பதிவு.
வரலாறுகள் பன்முகப்பார்வைகளைக் கொண்டவை. இப்பதிவுகள் தனியேஎனது பார்வையிலேயே எழுதப்படுகின்றது. இதனைப்போல் இந்நாட்டில்ஆரம்பத்தில் குடியேறிய தமிழர்கள் சமூகத்தின் இருப்புக்குபோராடியவர்கள் தமது பார்வையில் வரலாறுகளை பதிவு செய்யும்பொழுதுதான் சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்களின் குடியேற்ற வரலாறுஓரளவு முழுமை பெறும்.
சுவிஸ் வாழ் தமிழர்களின் மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட வரலாறும் வரலாற்று கதாநாயர்களும்…பகுதி 3
Loading...
தமிழீழ விடுதலை இயக்கங்களின் சுவிற்சர்லாந்து கிளைகள்.
முதலாவது பகுதியில் குறிப்பிட்ட படி அன்று சுவிற்சர்லாந்தில் ஆரம்பமான விடுதலைஇயக்கங்களின் கிளைகளின் அமைப்பாளர்கள் மிக புரிந்துணர்வுடன் செயற்பட்டார்கள் என்பதுஉண்மையான வரலாறு.
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிற்சர்லாந்து கிளை (LTTE)
விடுதலைப்புலிகளின் சுவிற்சர்லாந்து முதல்அமைப்பாளராக வசந்தன் கடைமையாற்றிஇருந்தார். ஆக்காலகட்டத்தில் அனைத்துவிடுதலை இயக்கங்களும் பெரிய தாக்குதல்களைஆரம்பிக்காத காலகட்டம். ஆதரவாளர்களைஇயக்க செயற்பாட்டிற்கு இணைப்பது எனபது மிககடினமான காலகட்டம். விடுதலைப்பலிகளினதும்ரெயோவின் தாக்குதலிற்கு பின்னர் பலர் தம்மைஇயக்கங்களில் இணைத்துகொள்ள முன்வந்தனர்.விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் கிருஸ்னாஅம்பலவாணர் இணைந்த பிற்பாடுவிடுதலைப்புலிகளின் சுவிசர்லாந்து கிளைஅடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தது
தமிழீழ மக்கள் விடுதலைக்கழக சுவிற்சர்லாந்து கிளை (PLOT)
நான் எவ்வித அரசியல் செயற்பாடும் அற்றுதனியே சுவிற்சர்லாந்தில் தமிழ்மக்களின்இருப்புக்கான போரட்டங்களிலேயே முக்கியகவனம் செலுத்தி வந்தேன். இதன் பொழுது தான்தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கிளையைசுவிற்சர்லாந்தில் ஆரம்பிக்க வேண்டும் எனறும்அதன் முக்கியத்துவத்தினையம் எனது நண்பன்பிரதாபன் வலுயுறித்தியிருந்தார்.அந்நியாத்தினை ஏற்று நானும் இன்னும் சிலநண்பர்களும் சேர்ந்து கிளையினைஆரம்பித்திருந்தோம். இதன்போது இராஜரட்னம்சுண்ணாகம் மனோ சண் கருணாமூhத்திசெங்காலன் மூர்த்தி சண் என பல நண்பர்கள்இணைந்து கொண்டனர். இதன் பின்னர் சுவிஸ் இரஞ்சன் பாரிஸ் கிளையிலிருந்து எம்முடன்வந்து இணைந்து கொண்டார்.
இவர்களது அனைவரினதும் ஓண்றினைந்த செயற்பாடுகள் தமிழீழ மக்கள்விடுதலைக்கழகத்தின் சுவிற்சர்லாந்து செயற்பாடுகளை வலுப்பெற வைத்தது.
அன்றை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகசுவிற்சர்லாந்து கிளை ஓர் கூட்டுநிர்வாகத்தினையே கொண்டிருந்தது. சுண்ணாகம்மனோவும் இந்நாட்டு மக்களுடன் இணைந்துசெயற்பட்ட ஓர் முக்கிய உறுப்பினர். இவரதுதொடர்புகளும் செயற்பாடுகளும் எமதுசெயற்பாடுகளிற்கு மேலும் வலுசேர்த்தது.
இந்த செயற்குழு தனியே தமிழீழ மக்கள்விடுதலைக்கழக அரசியலைமட்டும்செய்யவில்லை. சுவிற்சர்லாந்து மக்களிற்குதமிழர்கள் பற்றிய பல தகவல்களையும் Tamileelam Information Bureau என்ற பிரிவின் கீழ் வழநங்கிவந்தோம்.
அன்று சுவிற்சர்லாந்தில் இருந்த அனைத்துமுகாம்களிற்கு நிதிசேகரிப்பதற்கும்தொடர்புகளிற்குமாக ஓருவர் தெரிவு செய்ப்பட்டுநியமிக்கபட்டிருந்தார்கள். ஓவ்வெருமுகாம்களிற்கும் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஓருமுறை ஆயினும் சந்திப்பினை ஓழுங்குபடுத்திபிரச்சாரங்களை மேற்கொண்டோம். அன்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழக தனதுபிரச்சாரங்கள் மூலமாகவே தனக்கு பல ஆதரவாளர்களை திரட்டியது.
அந்த காலகட்டத்தில் தாயக செய்திகளை அறிந்துகொள்வது மிக கடினமாக இருந்தது. தமிழீழமக்கள் விடுதலைக்கழக இங்கிலாந்துகிளையினால் ஓர் தொலைபேசி செய்திசேவைஆரம்பிக்கபட்டிருந்தது. அதனை சுவிற்சர்லாந்தில்தொலைபேசி அழைப்பின் மூலம்பெற்றுகொள்ளும் முறையில் ஏற்பாடுசெய்திருந்தோம். இச் செய்தி சேவை மிக வேகமாகபல தமிழர்களிடம் சென்ற அடைந்தது. இச்செய்திதமிழீழ மக்கள் விதலைக்கழகத்தின் அரசியல்கலந்து இருந்தாலும் பல பொது தகவல்களையும்வழங்கியது குறிப்பிடதக்கது. இந்த செய்தயில்ஒலித்த குரல்களிற்கு சொந்தக்காரரான இலண்டன் செவ்சேள் நடா மோகன் மிக பிரபல்யமாகஇருந்தனர். இன்றும் நடா மோகனால் இலண்டனில் இருந்து தமிழ் வானொலியை திறம்படநடாத்தி வருகின்றார்.
இவை மட்டும் கழகத்தின் கிளையின் பிரச்சாரத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை. தமிழீழமக்கள் விடுதலைக் கழகத்தின் உத்தியயோக பூர்வமன பிரச்சார சஞ்சிகையான புதியபாதைதளத்திலிருந்து வெளிவந்திருந்தது. சுவிற்சர்லாந்து கிளை இந்நாட்டு இயக்கசெயற்பாடுகளைஇணைத்து விடுதலைப்பாதை என்ற பெயரில் மூன்று மாதங்களிற்கான அல்லதுஇரண்டுமாதங்களிற்கான சஞ்சிகையை வெளிக்கொண்டு வந்தது. அதேபோல் மற்றையஇயக்கங்கள் ஆன விடுதலைப்புலிகள், ஈழ மக்கள் விடுதலை முண்ணணி, தமீழீழ விடுதலைஇயக்கம், தத்தமது தமது வெளியீடுகளை கொண்டு வந்திருந்தன.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சுவிஸ் கிளையின் காரியாலயமானது எனது வீட்டிலேயேஅமைந்திருந்து.
இக்காலகட்டத்திலும் புதிதாக தஞ்சம்அடைந்தவர்கள் பேர்ண் புகையிரதநிலயத்திற்குவந்து தமது நண்பர்களை அல்லது உறவினர்களைஇனம்கண்டுகொள்வது அல்லது சந்திப்புகளைமேற்கொள்வது வழமை. சிலரிற்கு முகாம்கள்கொடுக்காது விடுதிகளில் தற்காலிகமாக தங்கவைக்கபட்டிருந்தனர். இவர்கள் சோறு கறி இன்றிஅல்லது உணவுக்கு பணம் போதமலும்நேரங்களை புகையிரத நிலையத்தில்களித்தனர்.இவர்களை இனங்கண்டு எனது நண்பர்பிராதபனே பலரை எமது காரியாலத்திற்குபுதியவர்களை அழைத்து வருவது வழமை. எமதுஅலுவலகத்தில் சமைக்கும் பொழுது யன்னலைபார்த்து பார்த்தே சமைப்பது வழமையான விடயமாக இருந்தது. தாயிரிக்கபட்ட உணவிற்குமேலே ஆட்கள் வருபார்களானால் சமையலில் ஈடுபடுவர் கூடுதலானாக ஆட்கள் வரும்எண்ணிக்கையை பொறுத்து கறிகளிற்கு தண்ணீரை ஊற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களும்நடந்தன.
இவ்வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் முதல் முதலாக தமிழ் கல்வி சேவையையும்ஆரம்பித்திருந்தது. போர்ணில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்திலேயே பிரத்தியேமாகதரப்பட்ட கட்டத்திலேயே பாடசாலை நடைபெற்றது.
இவ்வளவு வேகமாகவும் பலரை உள்வாங்கியஅமைப்பு நீண்ட காலம் தொடர முடியாமல்சென்றது. விடுதலைப் புலிகளினது தமிழீழவிடுதலை இயக்கத்தினதும் தாக்குதல்களும்தமிழீழ மக்கள்விடுதலைக்கழத்தில் அதிருப்தியைஏற்படுத்தியது. ஆயுதபோராட்ட மோகம்இக்காலகட்டத்திலேயே புலம்பெயர் தமிழர்களிடம்வலுப்பெற்றது. தமிழீழ மக்கள் விடுதலைக்பிரச்சாரக்கூட்டங்களில் கழகம் எப்பொழுதுதாக்குதல் நடாத்தும் என்ற கேள்வியோசுவிற்சர்லாந்து தமிழர்களிடம்மேலெழுந்தது. இதற்கு நாமம் தளத்திலிருந்துகிடைக்கும் தகவலைப்பெற்று நியாப்படுத்துவதுஉண்டு. ஓரளவு அரசியல் மயப்படுத்தபட்ட அமைப்பாக கழகம் இருந்தாலும் மற்றையஇயக்கங்களளை போல் உட்கொலைளும் மாற்று இயக்க கொலைகளையும் நடாத்தியதில்கழகமும் முன்நிலை வகுத்தது. இதனால் கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயகம் தலைமை வழிபாடுஉட்பூசல்கள் அனைத்தும் தலைதூக்கியது.
இக்காலப்பகதியிலேயே சந்ததியார் கொல்லப்பட்டார் என்ற செய்தி பரவலானது. இதைப்பற்றிசுவிஸ் கிளை சார்பிலே நாம் தளத்துடன் தொடர்பு கொண்டு விளக்கங்களை பெற முயன்றோம்.அவர்கள் எமது கேள்விக்கு பதிலளிக்காது பல நொண்டிசாட்டுக்களை தெரித்து எம்மைசமாதானப்படுத்த முயன்றனர்.
சுவிற்சர்லாந்து கிளை இவ்விடயத்தில் பெருத்த நம்பிக்கையீனத்தினை தன்னகத்தில்கொண்டிருந்நதது. இதேபோல் மற்றைய புலம்பெயர் தேசத்தில் இருந்த கிளைகளிடம்அதேவகைப்பட்ட சந்தேகமும் நம்பிக்கையீனமும் வலுப்பெற்றது.
இந்நிலைமையை சமாளிப்பதற்கு கழகத்தின் செயலதிபர்உமாமகேஸ்வரனை நெரடியாக சுவிற்சர்லாந்திற்குஅழைத்துவரப்பட்டு எமக்கு விளக்கமளிப்பதன் மூலமேதொடர்ந்தும் எம்மை செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன்எமது கிளைக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன்வருகைத்தந்திருந்தார். அதே வினாக்களையம் சந்தேகத்தினையும்நேரடியாக கேட்டிருதந்தோம். சுவிற்சர்லாந்து செயற்குழுக்குசெயலதிபரின் திருப்தி அளிக்கும் வகையில் பதில்கள்அமையவில்லை.
மேலும் தளத்திலும் உட்கட்சி போராட்டத்தின்காரணமாக கழகத்தில் பல உடைவுகள் ஏற்பட்டது.சுவிற்சர்லாந்து கிளைக்கு ஜேர்மனியிலிருந்துதாஸ் என்பவர் அனுப்பிவைக்கபட்டிருந்தார்.இவரது சூறாவலிப்பிரச்சாரங்களும்நியாயப்படுத்தலாலும் மக்களது கேள்விக்குஇடமளிக்காது வாய்கள் மூடப்பட்டன.
ஓருகட்டத்தில் சுவிற்சர்லாந்து கிளைஉறுப்பினர்கள் கழகத்துடன் இணைந்து வேலைசெய்ப்போவதில்லை ஓர் ஓருமித்தமுடிவெடுத்தனர். எமது முடிவுகளை எல்லோரும்கையெழுதது இட்டு துண்டுபிரசுரங்கள் மூலம்ஆதரவாளர்கிளிற்கு ஆறியப்புடுத்தி ஓதுங்கி இருந்தோம். இப்படி ஓர் முடிவினை எடுப்பதற்கானதுணிவு எமது உறுதியானதும் உண்மையான செயற்பாட்டின் விளைவழனாலே சாத்தியமானது.
அதன் எம்முடன் இணைந்து பிரிந்தவர்களில்ஓருவரான இரஞ்சனை வைத்து கழகம் மீண்டும்சுவிற்சர்லாந்தில் கிளை செயற்பட்டைஆரம்பித்தது. கழகத்தின் பின்னையைசெயற்பாட்டிற்கும் பழைய சுவிற்சர்லாந்து தமிழீழமக்கள் விடுதலை சுவிற்சர்லாந்து கிளைசெயற்பாடுகளிற்கும் எவ்வித சம்பந்தம்இருக்கவில்லை.
ஆனால் இன்றும பலர் எனனை தமிழீழ விடுதலைக்கழகத்தின் உறுப்பினர் அடையளப்படுத்தும்சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
முதல் அரசியல் சமூக சுயாதீன சஞ்சிகை
இயக்க செயற்பாடுகள் நடை பெறும் காலப்பகுதியில் ஓன்றியம் எனும் சஞ்சிகை எவ்விதவிடுதயை இயக்க சார்பும் அற்று வெளிவந்தது. இச்சஞ்சிகை சர்வதேசம் சமூக ஓடுக்குமுறைகள்விடுதலை இயக்கங்கள் மீதான விமர்சனங்களையும் தாங்கி வெளிவந்திருந்தது. இதன்ஆசிரியர்களாக யோகராஜாவும் (யோகா மாஸ்டர்) அம்பலம் கண்ணன் இருந்திருந்தனர்.இச்சஞ்கிகை ஓர் சிறுசஞ்சிகை உள்ளடக்கத்துடனும் வடவமைப்புடன் சுவிற்சர்லாந்தில்வெளிவந்த முதல் சுயாதீன சிறு சஞ்சிகை ஆகும்.
Zentrum 5
இயக்க செயற்பாடுகள் முடிவுக்ககொண்டுவரப்பட்ட பொழுதும் எனதுசெயற்பாடுகள் வேறுவடிவில் தொடர்ந்தன.ணுநவெசரஅ என்ற அமைப்பு ஆரமஇபத்தில்Fishermäteli என்ற இடத்தில் ஆரம்பகாலப்பகுதியில்இருந்து செயற்பட்டு வந்தது. இந்த நியையம்Flurastrasse விற்கு மாற்றபட்டது.
இந்நிலையத்தில் தமிழ்பாடசாலைகள்பரதநாட்டிய வகுப்புக்கள் யேர்மன்மொழிவகுப்புக்கள் நடாத்தபட்டு வந்தது.இந்நிலையத்திலேயே முதல் முதலாகசுவிற்சர்லாந்தில் பல மொழி நுலகம்அமைக்கபட்டிருந்தது. தமிழ்பிரிவினையே நானேஆரம்பித்து நிர்வகித்திருந்தேன்.
திருப்பி அனுப்ப இருந்த தமிழர்களிற்கானதும்வேலை இழந்தோருக்கானதுமான ஓர் ஆலோசனை மையத்தினையும் பல தகவல் வழங்கும்நிகழ்வுகளையும் நடாத்தி வந்திருந்தேன்.
இயக்கங்களின் உடைவினாலும் தனி ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை இழந்த பலரும்மீண்டும்மொரு புதிய தளத்தில் வேலைசெய்யும் நிலமை சாத்தியமானது. இத்தளத்தில் அரசியல்கலை கலாச்சார ஆர்வலர்கள் என பல தரப்புக்களும் ஒன்றிணைந்தனர்.
கதையாசிரியர் கணபதிப்பிள்ளை சுதாகரன்
சுவிற்சர்லாந்து தமிழரின் குடியேற்ற வரலாற்றில் எனது பங்களிப்பும் மேலும் நடந்தேறியசம்பவங்களின் தொகுப்பும் தொடரும்….
Loading...