ஜப்பான் கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷியாவின் இரு Su-34 ரக போர் விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலியான ஒரு விமானியின் உடல் மீட்கப்பட்டது.
ரஷியா விமானப்படைக்கு சொந்தமான இரு Su-34 ரக போர் விமானங்கள் ஜப்பான் பெருங்கடல் பகுதியின் மீது நேற்று (பயிற்சி) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.
கடலோரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் வானத்தில் வட்டமிட்டு பறந்தபோது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதி கடலில் விழுந்தது.
இந்த விபத்தில் இரு விமானிகளும் அவசர வாசல் வழியாக குதித்து உயிர் பிழைத்ததாக நேற்று தகவல் வெளியானது.
3 விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் 5 கப்பல்களில் சென்று விபத்து நிகழ்ந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்புப்படையினர் ஒரு விமானியின் உடலை கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு விமானியை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.