வீதியில் பயணித்தவர் திடீரென எச்சில் துப்பியதில் அருகில் வந்தவர் மீது எச்சில் பட்டதால் ஆத்திரத்தில் எச்சி துப்பியவரை ஏரிக்குள் தள்ளிவிட்டு தாக்கிய சம்பவம் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;
காக்கைதீவில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி நபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு முன்னால் சென்ற நபர் திடீரென்று தனது பக்கவாட்டில் துப்பியுள்ளார்.
பின்னால் சென்றவர் ஹெல்மட் கண்ணாடியை மூடாமல் சென்றமையினால் அவரின் முகத்தில் எச்சில் பட்டது.
இதனால் ஆத்திரம் கொண்ட குறித்த நபர் முன்னால் சென்றவரின் ஊந்துரியின் பின்பக்கம் மோதியுள்ளார்.
சடுதியில் நிலைகுலைந்து முன்னால் சென்றவர் அருகல் உள்ள ஏரிக்குள் விழுந்துவிட்டார்.
அத்தோடு நின்று விடாமல் சண்டையில் ஈடுபடுவதற்காக அவரும் ஏரியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏரிக்குள் விழுந்தவர் விழுந்த உடனேயே சேற்றை அள்ளி அவர்மீது எறிந்து மோதியுள்ளார்.
இவ்வாறான நிலையில் வீதியால் சென்றவர்கள் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி மோதலை தீர்த்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது