கனடாவைச் சேர்ந்த நபருக்கு லாட்டரியில் $7.9 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.
St. Albert நகரை சேர்ந்த ராய்மெண்ட் முசல் என்பவர் கடைக்கு சென்ற போது யதேச்சியாக லாட்டரி சீட்டை வாங்கினார்.
அந்த சீட்டுக்கு தற்போது $7.9 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. அதாவது இரண்டு நபர்களுக்கு சேர்ந்து $15.8 மில்லியன் பரிசு விழுந்தது.
அதில் முசலுக்கு $7.9 மில்லியனும், ஒன்றாறியோவை சேர்ந்த நபர் ஒருவருக்கு மீதியும் பரிசாக விழுந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இது குறித்து முசல் கூறுகையில்,
என்றாவது நமக்கும் பரிசு விழும் என்று தான் பொதுவாக மக்கள் லாட்டரி சீட்டு வாங்குவார்கள், ஆனால் நான் யதேச்சியாக தான் வாங்கினேன்.
என்ன தான் பெரிய தொகை எனக்கு பரிசாக விழுந்தாலும் நிலையான மற்றும் சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ளவே விரும்புகிறேன்.
சில ஆண்டுகளாக நான் இசைப்பதிவு செய்து வருவதால் தற்போது என்து 2வது இசைப்பதிவு வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதை விளம்பரப்படுத்தவும் லாட்டரியில் வென்ற பணத்தை பயன்படுத்துவேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.