மாதுளம்பழம் என்றாலே சுவையானதும், எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் பழ வகை. இதில் உடலிற்கு தேவையான அணைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றது. அத்துடன் சமிபாட்டை சீராக்குவது மட்டுமல்லாது சருமத்தை புத்துணர்ச்சி பெற வைக்கிறது.
மாதுளம்பழத்தை பானமாகவும், பழமாகவும் உட்கொண்ட நீங்கள் அதனை சருமத்திற்கு பூசியுள்ளீர்களா? இதில் காணப்படும் விட்டமின் ஏ கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்து, சருமத்தின் தன்மையை மேம்படுத்தும். விட்டமின் ஈ தோல் சுருக்கங்கள், சூரியக் கதிர்களின் பாதிப்பு போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
இதில் விட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதனால் சருமம், உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது. மேலும் எல்லா விதமான சரும பிரச்சினைகளையும் தீர்ர்து விடுகிறது.
1. பொலிவான சருமத்திற்கு.
மாதுளம்பழத்தில் உள்ள விட்டமின்களால் சருமம் புத்துணர்ச்சியும் புதுப் பொலிவையும் பெற்றுத் தரும்.
தேவையான பொருட்கள்:
• மாதுளம் பழம் -1
• ஒரு கப் நீர்.
•
பயன்படுத்தும் முறை:
மாதுளம்பழத்தை மசித்து நீரில் கலந்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
2. பிரகாசமான சருமத்திற்கு:
சருமத்தின் நிறத்திட்டுக்களை நீக்கி அதன் பிரகாசத்தை அதிகரிப்பதற்கு மாதுளம்பழத்தில் தயாரிக்கப்பட்ட கலவையை முகத்தில் வாரத்திற்கு ஒரு தடவை பயன்படுத்த வேண்டும்.
தேவையான பொருட்கள்:
• 1 மாதுளம்பழம்.
• 3 மேசைக்கரண்டி தயிர்.
•
பயன்படுத்தும் முறை:
மாதுளம்பழத்தை பிளண்டரில் அரைத்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதில் தயிரைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
3. பருக்களை குணப்படுத்துவதற்கு:
மாதுளம் பயன்படுத்துவதனால் பருக்கள் அதனால் ஏற்படும் தளும்புகள், கரும்புள்ளிகளை நீக்கும் வல்லமை உள்ளது.
தேவையான பொருட்கள்:
• 1 மாதுளம்பழம்.
• 1 தேக்கரண்டி தேன்.
• 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு.
•
பயன்படுத்தும் முறை:
மாதுளம்பழத்தை மசித்து அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்தில் இரு தடவை செய்வது சிறந்தது.
4. உலர்ந்த சருமத்திற்கு:
மாதுளம் பழத்தில் உள்ள ஊட்டச்சத்தினால சருமத்தின் ஈரலிப்பை அதிகரித்து சரும வறட்சியில் இருந்து தீர்வைத் தரும். அத்துடன் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மென்மையும் அதிகரிக்கச் செய்யும்.
தேவையான பொருட்கள்:
• ½ மாதுளம் பழம்.
• 1 கரண்டி ஓட்ஸ் உணவு.
• 1 கரண்டி தேன்.
• 1 கரண்டி மஞ்சள் கரு.
•
பயன்படுத்தும் முறை:
மாதுளம்பழத்தை மசிக்கவும். அத்துடன் ஓட்ஸை பவுடராக்கி மாதுளம்பழத்துடன் சேர்த்து, தேன், முட்டை மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வது சிறந்தது.