சுவிட்சர்லாந்தில் அன்னப்பறவைகளுக்கு உணவளிக்கக் கூடாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Lugano நகரில் அன்னப்பறவைகள் சாலைகளில் நடந்து செல்வது ஒரு வாடிக்கையான நிகழ்ச்சியாகிவிட்ட நிலையில், அவைகளுக்கு உணவளிக்கக் கூடாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
ஏரிகளை விட்டு சாலைகளில் இறங்கி நடக்கும் அன்னப்பறவைகளுக்கு உதவுவதாக நினைத்து மக்கள் அவைகளுக்கு உணவளிக்க முன் வருகின்றனர்.
ஆனால் அப்படி உணவளிப்பது அன்னப்பறவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
அன்னப்பறவைகள் அதிகம் உண்பதால் அவற்றால் வேகமாக ஓடவோ பறக்கவோ முடியாது. அதனால் அவை சாலையில் செல்லும் கார்களில் சிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அன்னப்பறவைகளுக்கு உலர்ந்த ரொட்டிகளை உணவாக அளிக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.