இயக்குநர் பா.ரஞ்சித்தின் மெட்ராஸ், கபாலி, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரித்விகா. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது, என்கிற தகவலை ஒரு படவிழாவில் அவரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் “நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் அவருக்கும் எனக்கும், திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி இருக்கிறது.
என் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்து விடுவேன்.ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன்.புதிய படங்கள் எதும் ஒப்பந்தமாகவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார். ரித்விகா தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது