வரலாற்றில் முதல் தடவையாக, தமிழர்களின் தூண்டுதலால் இன்ரர் போல் பிடியானை ஒன்று பிறப்பிக்கப்பட உள்ளது. லண்டனில் பிரியங்கவாவை தெரியாத தமிழர்கள் இருக்க முடியாது. அவர் பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயத்தின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியவர். தமிழர்கை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டி. பின்னர் லண்டனில் இருந்து தப்பி ஓடி இலங்கையில் உள்ளார்.
இன் நிலையில் அவருக்கு எதிராக பிரித்தானியாவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் அவர் குற்றவாளியாக இனம் காணப்பட்ட 90 சதவிகிதமான சாத்தியக் கூறுகள் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள். இது நடக்கும் பட்சத்தில் உடனடியாக இன்ரர் போல் பிடியானை தேவை என வழக்கறிஞர்கள் கோரவுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. எனவே லண்டனில் உள்ள இலங்கை தூதுவருக்கு இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பிரித்தானிய நீதிமன்றம் வெகு விரைவில் வழங்கவுள்ளது.