உத்தரப் பிரதேசத்த்தில் வசித்து வந்தவர் துருவ் நாராயணன். இவருக்கு ஜோதி குமாரி மற்றும் நேகா என்ற இருமகள்கள் உள்ளனர். இவர் சலூன் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில் துருவ்க்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2014-ல் படுக்கையில் விழுந்தார்.
இதனால், வருமானத்துக்கு வழியில்லாமல், மகள்கள் இருவரும் சலூனை ஏற்று நடத்த முடிவு செய்தனர். ஆனால் அவர்களிடம் சவரம் செய்துகொள்ள வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டினர்.
மேலும் சிலர் அந்த பெண்களிடம் தவறாக நடக்க முயற்சி செய்தனர். அதனால் அவர்கள் தங்களது தலைமுடியை வெட்டி, தீபக் மற்றும் ராஜு என்று ஆண் பெயரை வைத்துக் கொண்டனர்.
காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு, சலூனை திறந்து அவர்கள் சேலைபார்த்து வந்தனர். ஜோதி படித்து முடித்துவிட்டு பட்டதாரி ஆகிவிட்டார், நேகா படித்துக்கொண்டிருக்கிறார். இருவரும் சேர்ந்து தினந்தோறும் குறைந்தது 400 ரூபாய் சம்பாதித்தனர். அது தந்தையின் மருத்துவத்துக்கும் குடும்பச் செலவுக்கும் போதுமானதாக இருந்தது.
இதுகுறித்து அந்த பெண்கள் பேசுகையில், ஆரம்பத்தில் கிராமத்தில் சிலர் எங்களைக் கிண்டல் செய்தனர். ஆனால் நாங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் எங்களது வேலையை பார்ப்போம். நாளாக எங்களுடைய நிஜ அடையாளத்தை வெளிப்படுத்த துவங்கினோம் என உற்சாகத்துடன் கூறியுள்ளார். இவர்களை குறித்த செய்திகள் வைரலாகவே அந்த பெண்களை அரசு அதிகாரிகள் அழைத்து கவுரவித்துள்ளனர்.