எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் ரணில் விக்ரமசிங்கவின் ஐந்தாவது படம் விரைவில் தொங்க விடப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இன்று உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
இதன்போது அங்கு தொங்க விடப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்ட மஹிந்த, ரணில் அடுத்த படத்தையும் தொங்கவிட தயாராகுமாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. விரைவில் ஐந்தாவது படத்தையும் தொங்கவிட வேண்டும் என மஹிந்தவை பார்த்து உதயகம்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்களின் புகைப்படங்களுடன் அந்த காலப்பகுதியும் தெரிவிக்கப்பட்டு புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், அது விரைவில் இடம்பெறும். அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். விரைவில் நாடாளுமன்ற இரண்டாம் மாடிக்கு (பிரதமர் காரியாலயத்துக்கு) செல்ல பிராத்தியுங்கள் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.