பிரான்ஸ் தலைநகர் பரிஸ் உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை புதன்கிழமை பிரான்சில் கடும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மற்றும் வடக்கு பிராந்தியங்களில் அதிகளவான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
l’Aisne, les Ardennes, l’Aube, le Cher, l’Eure-et-Loir, l’Indre, l’Indre-et-Loire, le Loir-et-Cher, le Loiret, la Marne, la Nièvre, le Nord, l’Oise, Pas-de-Calais, Paris மற்றும் 3 புறநகர்கள், Seine-et-Marne, Yvelines, Somme, l’Yonne, l’Essonne,Val-d’Oise ஆகிய 24 மாவட்டங்களிலேயே கடும் பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.