யாழில் வலி வடக்கின் வீட்டின் கூரையை பிரித்து கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதோடு பதின்ம வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். வலி வடக்கில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது, கொள்ளை கும்பல் ஒன்று வலி வடக்கு பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளையிட்டுள்ளனர். அப்போது, ஒரு வீட்டில், இருந்த சிறுமி உட்பட மூன்று பெண்களை கட்டி வைத்துள்ளனர்.
பின்பு, வீட்டில் இருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டதோடு விடாமல், அங்கிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்ற பொலிசார், சிறுமியை மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அத்துடன் சம்பவம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.