கோவையில் காதலித்து ஏமாற்றிய பெண் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு கதறிய வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இம்மானுவேல் என்பவர் 5 வருடங்களாக ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாகவும், பின் குறித்த இளம்பெண் அவரை ஏமாற்றிவிட்டு சென்று விட்டதாகவும், இதனால் மன உளைச்சலில் இருப்பதாக கூறி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், இது குறித்து பொலிசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், இம்மானுவேல் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்து இம்மானுவேல், செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஐந்து வருடங்களாகக் காதலித்த பெண்ணை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தேன். திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் என்னிடம் நெருங்கிப் பழகியதற்கு ஆதாரம் அனைத்தும் என்னிடம் உள்ளது. திருமணம் ஆன சில நாட்களில் அவர் என்னை பிரிந்துவிட்டார். அவரது குடும்பத்தார் என்னை பேச்சு வார்த்தைக்காக என்று அழைத்து அடி பின்னிவிட்டனர் என்று கூறினார்.
மேலும், இது குறித்து பொலிசாரிடம் புகார் தெரிவித்தும், அவர்கள், என்னை ஏமாற்றியவள் மீதும், என்னை தாக்கியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், மனதளவும் உடலளவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என் காதலி மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்றார்.