அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வெஸ்ட்புரூக் பகுதியில் உள்ள ஆற்றின் மீது பிரமிப்பூட்டும் காட்சி உருவாகியுள்ளது. ஆற்றின் இயற்கை அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக, பனி கொட்டித் தீர்த்து ஆற்றின் படுகை நிலா போல் மாறி காணப்படுகிறது.
வெப்பநிலையானது படிப்படியாக வீழ்ச்சியடைந்ததால், பணிப்பாறைகளிலிருந்து வெளியேறும் நீர்க்கசிவு, பனி தகட்டினை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாபெரும் சுழலும் பனி தகடு 90 மீட்டர் பரப்பளவில் உள்ளது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், ‘இந்த பனி தகடுகள் அரிதாகவும் , இயற்கையாகவும் உள்ளது. இது கிட்டத்தட்ட 100 மீட்டர் அகலம் கொண்டது. மேலும் இது எதிர் கடிகார திசையில் சுழல்கிறது’ என கூறினர்.
இவ்வழகை காண பலரும் உற்சாகத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.