போர்த்துக்கல் கல்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பாரிய தொகை பணம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 16.5 மில்லியன் யூரோ அபராதம் செலுத்துமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 33 வயதான ரொனால்ட்டோ தற்போது இத்தாலியில் உள்ள யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
முன்னதாக அவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடியுள்ளார்.
அத்துடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மாட்ரிட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
அத்துடன், நீதிமன்றம் விதித்த அபராத தொகையை கட்ட அவர் இணக்கம் தெரிவித்தார்.
ரொனால்டோ கால்பந்து வீரர்களில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.