மாடு மற்றும் ஆட்டு இறைச்சிகளிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பை அவுஸ்திரேலியாவின் புதிய பணத்தாள் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தவேண்டாம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சுமார் நான்கரை லட்சம் இந்துக்கள் வாழுகின்றனர்.
அவ்வாறு இருக்கையில் இந்த விடயத்தை உணர்வுப் பூர்வமாக அணுகுமாறு அவுஸ்திரேலிய ரிசேர்வ் வங்கியிடம் இந்து அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச இந்து மாமன்ற தலைவர் Rajan Zed அவுஸ்திரேலிய வங்கி கவர்னர் Philip Lowe விடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison இடமும் இவ் விடயத்தை எடுத்துரைத்து வலியுறுத்துமாறு கோரியுள்ளார்.
இதேவேளை மாடு மற்றும் ஆட்டு கொழுப்பு பணத்தாள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பிரதான காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து வங்கி வெளியிட்ட தகவல் ஒன்றின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.
அதாவது பணத்தாள்கள் வழுவழுப்பாக பேணுவதற்கும் வேறு தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் மேற்குறித்த கொழுப்புக்கள் பயன்படுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.