இந்திய ஜோதிடர் ஒருவரை அவுஸ்திரேலியாவின் சிட்னி பொலிசார் கைது செய்துள்ளனர்.
இலவசமாக ஜோதிடம் சொல்வதற்கு வருமாறு கூறி சிறுமி ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் எனத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய ஜோதிடரை சிட்னி பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்;
ஜோதிடம் பார்ப்பதற்காக இந்தியாவிலிருந்து சிட்னிக்கு வந்திருந்த 31 வயதான இந்தச்சோதிடர் 14 வயது சிறுமியை தான் தங்கியிருந்த இடத்திற்கு இலவசமாக ஜோதிடம் பார்க்க வருமாறு அழைத்துள்ளார்.
அதனை நம்பி Liverpool இல் உள்ள அலுவலகத்திற்கு தனியாக சென்ற சிறுமி மீது குறித்த ஜோதிடர் பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளார் என நேற்று முன்தினம் 21 ஆம் திகதி மாலை பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த தகவலினைத் தொடர்ந்து குறித்த ஜோதிடரை தேடிச்சென்றபோது அவர் சிங்கப்பூர் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் அவரை விமானநிலையத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் குறித்த ஜோதிடருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த ஜோதிடருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனத் தெரிகிறது.